`காய்ச்சலா, அரசு மருத்துவமனைக்கு போங்க; அச்சம் வேண்டாம்!’- கொரோனா சிறப்பு அதிகாரி சொல்கிறார்

 

`காய்ச்சலா, அரசு மருத்துவமனைக்கு போங்க; அச்சம் வேண்டாம்!’- கொரோனா சிறப்பு அதிகாரி சொல்கிறார்

காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், உடல் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டம் என்று கொரோனா சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி கூறினார்.

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக வேளாண்மைத்துறை செயலளர் ககன்தீப்சிங் பேடியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து, வீடியோ காட்சி மூலம் மாவட்ட கலெக்டர அன்புசெல்வனிடம் ஆலோசனை நடத்திய ககன்தீப் சிங் பேடி, மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளான ஆல்பேட்டை, திருப்பாதிரிபுயூர், வெள்ளிமோட்டான் தெரு, தண்டபானி நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

`காய்ச்சலா, அரசு மருத்துவமனைக்கு போங்க; அச்சம் வேண்டாம்!’- கொரோனா சிறப்பு அதிகாரி சொல்கிறார்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, “பொதுமக்களுக்கு தொற்று நோய் தொடர்பாக முன்பு காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை, சுகாதார வளாகம் சென்று தெரிவிக்க வேண்டும். பின்னர் தொற்றுநோய் உள்ளதா ?என்பதனை உறுதி செய்ய உமிழ் நீர் பரிசோதனை எடுத்துக் கொண்டு தங்களைத் தானே பொதுமக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பரிசோதனை மேற்கொண்டவர்கள் கடைசியாக பத்து நாட்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? எங்கு சென்றார்கள் என்பது குறித்து முழு விவரத்தை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் பரிசோதனை செய்து கொண்ட நபர்கள் தெரிவித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு உடனடியாக அந்த நபர்களிடம் நேரில் சென்று உடல்நிலை பாதிப்பு உள்ளதா ? என்பதனை சோதனை செய்ய வேண்டும். ஏதேனும் பாதிப்பு இருந்ததாக கூறினால் உடனடியாக உமிழ்நீர் பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்றுநோய் பாதிக்கப்பட்டதாக பல்வேறு பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகிறோம். தொற்றுநோய் ஏற்பட்டால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தொற்று நோய் ஏற்பட்டாலும் முதற்கட்டத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு சரி செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.