காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவுக்கு ஆதரவு!

 

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன்  திமுகவுக்கு ஆதரவு!

திமுகவுக்கு காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆதரவு அளித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன்  திமுகவுக்கு ஆதரவு!

பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் பாமகவுக்கு எதிராக மாறினர். தனது தந்தை பாமகவுக்கு உழைத்ததாகவும், அவரை ராமதாஸ், அன்புமணி கண்டுகொள்ளவில்லை என்றும் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன்  திமுகவுக்கு ஆதரவு!

இதை தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் சந்தித்தார் .

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காடுவெட்டி குரு அவர்களின் மகன்-மாவீரன் மஞ்சள்படையின் தலைவர் தம்பி கனலரசன் அவர்கள் என்னை சந்தித்து தங்கள் இயக்கத்தின் ஆதரவை தி.மு.க-க்கு தெரிவித்தார். ஆக்கப்பூர்வமான பல கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவருக்கும் அவரின் இயக்கத்துக்கும் வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துகொள்கிறேன்” என்றார்.