காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு : ராமதாஸ் குடும்பம் தான் காரணம் என குற்றச்சாட்டு!

மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது காடுவெட்டி குருவின் ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை, காடுவெட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், பாமக பிரமுகருமான சின்னபிள்ளை, அவரது சகோதரர் காமராஜ் ஆகியோர் பிடித்து வைத்துள்ளனர்.

இதனால் பிடித்து வைத்துள்ள பைக்கை மீட்டு செல்ல, காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது காமராஜ் மகன் சதீஷுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மூவரும் அரிவாளால் தக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காயமடைந்த மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து கூறும் குருவின் தாய் கல்யாணி, ராமதாஸ் குடும்பத்தின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Most Popular

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...

`வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!’- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் கணவனை மனைவி பிரிந்து சென்றார். தனியாக இருந்த கணவன் ஏரியா தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன்...

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...