பாமகவை சுற்றி வளைக்கும் ‘காடுவெட்டி குரு குடும்பம்’!

 

பாமகவை சுற்றி வளைக்கும் ‘காடுவெட்டி குரு குடும்பம்’!

பாமகவின் முன்னணி தலைவர், எம்.எல்.ஏ, வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குரு மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்திற்கும் பாமகவுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராமதாஸ் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டிய காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், பல முறை அவருக்கு எதிராக பேட்டி கொடுத்து வந்தார். அதுமட்டுமில்லாமல், பாமகவுக்கு எதிராக மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

பாமகவை சுற்றி வளைக்கும் ‘காடுவெட்டி குரு குடும்பம்’!

இந்த சூழலில் தான், காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாமகவை எதிர்த்து தான் சொர்ணலதா களமிறங்குகிறார். அதற்கான பிரச்சாரங்களும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாமகவை சுற்றி வளைக்கும் ‘காடுவெட்டி குரு குடும்பம்’!

இந்த நிலையில், காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பாமகவுக்கு எதிராக 23 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து பேசிய விருதாம்பிகை, அப்பா மறைவுக்கு பிறகு எங்களை மோசமாக நடத்தினார்கள். அதை பற்றியெல்லாம் பேச வேண்டாம். பாமகவுக்கு எதிராக 23 தொகுதிகளில் களமிறங்க உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே பாமகவுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது விருத்தாம்பிகை களமிறங்குவது பாமகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.