kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


காடுவெட்டி குருவுக்கு ஸ்லோபாய்சன் கொடுக்கப்பட்டது!? ராமதாஸ் குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

காடுவெட்டி குரு
காடுவெட்டி குரு
Loading...

சென்னை: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல என்று அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் தாய், சகோதரி மீனாட்சி, மகன் கனலரசன் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானது அல்ல, அதில் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தனர்.

kanalarasan ttn

இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காடுவெட்டி குரு மகன் கனலரசன், ' கட்சிக்காக என் தந்தையைப் பயன்படுத்திக் கொண்டனர். கட்சிக்காக அப்பா கடுமையாக உழைத்தார். ஆனால், அவர்  மருத்துவமனையிலிருந்தபோது, யாரும் உதவி செய்ய வரவில்லை. என் தந்தையை அழிக்க வேண்டும் என்று 30 வருடமாக சதி செய்திருக்கிறார்கள்.

pmk ttn

பாமக தலைமையால் எனக்கு  ஆபத்து வந்துவிடும் என்று  என் அம்மா பயப்படுகிறார்.  என் அப்பாவின் மரணம் இயற்கையானதல்ல, ஸ்லோபாய்சன் கொடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, குருவுக்கு செலவு பண்றது வேஸ்ட்டு, அவருக்கு எதுக்கு செலவு பண்ணணும். இறந்தா இறந்துட்டு போகட்டும், விட்டுரலாம்னு அன்பு மணி சொன்னார். அன்புமணியின் வளர்ச்சிக்கு அவர் தடையாக இருப்பதாக, கருதினார்கள். அதனால் மற்றக் கட்சியினருக்கு அவரை எதிரியாக மாற்றினார்கள். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிரியாக்கினார்கள்.பாமகவை வன்னியர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது உண்மையல்ல. வன்னியர்கள் அனைத்து கட்சியிலும் இருக்கிறார்கள். வன்னியர்கள், பாமகவுக்கு இந்தத் தேர்தலில் பதில் சொல்லுவார்கள்' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

2018 TopTamilNews. All rights reserved.