சசிகலாவின் ஆடியோ… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி!

 

சசிகலாவின் ஆடியோ… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு கடந்த ஜனவரி மாதம் சிறையிலிருந்து விடுதலையானார் சசிகலா. அவர் சென்னை திரும்பிய போது, அவரை வரவேற்க அலைக்கடலென திரண்ட மக்கள் கூட்டம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த அளவுக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த சசிகலா, அதிமுகவை ஆட்டி படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தான் அரசியல் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

சசிகலாவின் ஆடியோ… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி!

சசிகலாவின் இடையூறுகள் ஏதுமின்றி தேர்தலை சந்தித்த அதிமுக, ஆட்சியை கோட்டை விட்டது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில், சசிகலா இப்போது அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவ்வப்போது அதிமுக தொண்டர்களுடன் பேசி ஆடியோக்களை வெளியிட்டு கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 40க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளிவந்துள்ளன. சசிகலாவுடன் பேசிய 15க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சசிகலாவின் ஆடியோ… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி!

இந்த நிலையில் சசிகலா ஆடியோ வெளியிடுவது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சசிகலா ஆடியோ வெளியிடுவது தொடர்பாக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தெளிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி நாளை அதிமுக மாவட்ட கழகத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிமுக தலைமைக்கு அனுப்பப்பட உள்ளது. அதில் இடம் பெறக்கூடிய அம்சங்களை அதிமுக தலைமை இன்னும் அனுப்பவில்லை என்று கூறினார். மேலும், அதிமுக மீது யாராலும் எந்த சாதியையும் பூச முடியாது; அதை மக்கள் நம்பவும் மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.