செப்.1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பா? அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்

மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி திரையரங்குகள் திறக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயரின் சித்ரவதைக்கு உள்ளன கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் கிராமத்தினை சேர்ந்த 34 தியாகிகளைப் போற்றும் வகையில் அரசு விழா அறிவிக்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் கொரோனா பணிகள் ஆய்வு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர‌ உள்ளார்.

திரையரங்கு திறப்பது குறித்து வரும் ஒன்றாம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி திரையரங்குகள் திறக்கப்படும். கொரோனா பணிகள் குறித்து மத்தியில் உள்ள பாஜக அரசு என்ன வழிமுறைகள் வகுத்து கொரோனா தடுப்பு பணிகளை செய்ய சொல்கிறார்களோ, அந்த வழிகாட்டுதல் படி தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது, ‌ இதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தமிழக முதல்வர் தெளிவான கருத்தை கூறியுள்ளார். நாம் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் கட்டத்தில் உள்ளோம். கொரோனா‌ இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. அரசு எடுத்த நடவடிக்கையினால் கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.