உதயநிதி ஸ்டாலின் வயதுக்கு மீறி பேசுகிறார்! சசிகலாவுக்காக கோபப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

உதயநிதி ஸ்டாலின் வயதுக்கு மீறி பேசுகிறார்! சசிகலாவுக்காக கோபப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, “முதல்வர் நேரடியாக விவாதத்திற்கு அழைத்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிறேன் அல்லது வரவில்லை என்று கூறவேண்டும். ஆனால் நிபந்தனைகள் விதிக்க முகஸ்டாலின் யார்? நிபந்தனைகள் இல்லாமல் ஒரே மேடையில் விவாதம் செய்ய முதல்வர் அழைக்கிறார். ஆனால் ஸ்டாலின் நிபந்தனைகள் விதிக்கிறார். நிபந்தனைகள் விதிப்பதை பார்த்தால் அவர் பின்வாங்குகிறார் என்று அர்த்தம். ஏனெனில் மு க ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. மு.க. ஸ்டாலின் நிபந்தனை என்று நொண்டிச் சாக்கு சொல்கிறார்.

சசிகலா பற்றி உதயநிதி ஸ்டாலின் அவதூறாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்துள்ளது, பெண்களை கேவலப்படுத்துவது திமுகவிற்கு கைவந்த கலை, அவங்க தொழில் அதுதான், உதயநிதி ஸ்டாலின் வயதுக்கு மீறி பேசுகிறார். பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக நிர்வாகி சம்பந்தப்பட்டு இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை காப்பாற்ற அரசு முயற்சி செய்யவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெரம்பலூரில் அழகு நிலையத்தை எப்படி அடித்தார்கள், கேவலப் படுத்தினார்கள் என்பது தெரியும்.1989ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது சட்டமன்றத்தில் அவரின் தலைமுடியை இழுத்து பிடித்து சிரம படுத்தினர். சட்டமன்றத்தின் கருப்பு நாளாக மாற்றியதற்கான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர்.

உதயநிதி ஸ்டாலின் வயதுக்கு மீறி பேசுகிறார்! சசிகலாவுக்காக கோபப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுக சார்பில் அதிமுகவை புறக்கணிப்போம் என்று கிராமசபை கூட்டம் நடத்துகின்றனர். இதில் திமுகவினர் தான் தீர்மானம் போடுகின்றனர். ஊராட்சிமன்ற தலைவரோ உறுப்பினர்களோ தீர்மானம் போட வில்லை, கிராமசபை என்ற போர்வையில் திமுக அரசியல் செய்கிறது. அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பது திமுகவின் கருத்து. திமுகவை அடித்து விரட்டுவோம் என்று தீர்மானம் போட எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும். சசிகலா வெளியே வருவதற்கும் அதிமுக பொதுக்குழுவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆண்டுதோறும் வழக்கமாக நடத்தக்கூடிய கூட்டம்தான். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தேர்தல் பணிகள் பற்றி தான் கூட்டத்தில் விவாதிக்கப்படும். சசிகலா பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை” எனக் கூறினார்.