கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து!

 

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து!

கொரோனா பரவல் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக இலங்கை யாழ் மாவட்ட குருமுதல்வர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை சிவகங்கை மறைமாவட்ட வேர்கோடு பங்கு தந்தைக்கு அவர் அனுப்பியுள்ளார்.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து!

முன்னதாக இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவின்போது இலங்கை-இந்திய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என முடிவு செய்திருந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு திருவிழா முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.