பெண்களை மிரட்டி பாலியல் உறவு கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டிய விவகாரம் – காசியின் கூட்டாளி கைது!

 

பெண்களை மிரட்டி பாலியல் உறவு கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டிய விவகாரம் – காசியின் கூட்டாளி கைது!

சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களை ஏமாற்றி பாலியல் உறவு கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காசியின் கூட்டாளி தினேஷ் என்பவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் காசி(26), சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, ஆபாசப் படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்தார். இவரைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், காசி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போலப் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களைக் காட்டி அவர்களது அம்மாக்களையும் அடிபணிய வைத்திருக்கிறார் என்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது குண்டர் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காசியிடம் நடத்திய விசாரணையில் அவரது கூட்டாளி டேசன் ஜினோ என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கௌதம் என்பவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வெளிநாட்டில் இருந்து வரும் போது கைது செய்வதற்கு விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்த வழக்கை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

பெண்களை மிரட்டி பாலியல் உறவு கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டிய விவகாரம் – காசியின் கூட்டாளி கைது!

சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையில் போலீசார் காசி வழக்கை விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காசியையும் அவனது கூட்டாளி டேசன் ஜினோ வையும் 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் காசி, அவரது நண்பர் தினேஷ் என்பவர் குறித்து முக்கிய தகவல்களை கூறியுள்ளார். காசி ஏமாற்றிய பெண்களை மிரட்டுவதற்காக அவர்களது ஆபாச படங்களை தினேஷுக்கு கொடுத்துள்ள நிலையில் தினேஷ் அந்த படங்களை பயன்படுத்தி காசி ஏமாற்றிய பெண்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து பணத்தையும் பறித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவலை காசி கூறியதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சில பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் கணேச புரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தினேஷ் நாகர்கோவிலில் பல பேக்கரி நிறுவனங்களை நடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட தினேஷ் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.