காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை

 

காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதாலும், அதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்பதாலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை

இந்நிலையில் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் நாளில் மெரினா கடற்கரையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். காணும் பொங்கல் தவிர 14, 15, 17 ஆகிய தேதிகளில் மெரினா கடற்கரையில் இரவு 10 மணிவரை பொதுமக்கள் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் காணும் பொங்கலன்று பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.