• April
    04
    Saturday

Main Area

Main



கைநீட்ட முடியாத விஜயகாந்த்... பையை சுறுக்கிய பிரேமலதா.. கேப்டனுக்கு இப்படியொரு நிலையா..?

விஜயகாந்த்
விஜயகாந்த்

வெறும் கையால்  முழம் போட்டுவிட்டுக் கொண்டிருக்கிறார் என பாய்கிறார்கள் தேமுதிக பொருளாளரான விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மீது. vijayakanth

விஜயகாந்த் நிதானமாக இருந்தபோது கேட்பவருக்கும், கேட்காமல் இருந்தவர்களுக்கும் அள்ளித் தந்தார். தமிழகத்தில், முக்கியமான விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி கொடுத்து உதவுவது  விஜயகாந்தின் வழக்கம். அதே போல் கட்சிக்காரர்கள் பாதிக்கப்பட்டாலும் தாராளமாக நிதியை அள்ளிக் கொடுப்பார் விஜயகாந்த். இதனால் தான் ஆரம்ப காலத்தில், அவரது கட்சி அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது.

vijayakanth

 ஆனால், கட்சியின் பொருளாளர் பதவிக்கு அவரது மனைவி பிரேமலதா வந்ததும் கையை சுருக்கிக் கொண்டார். ஒரு விபத்தில் சிக்கி, சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிற தே.மு.தி.க., முன்னாள் எம்.எல்.ஏ., தினகரனுக்கு எந்த நிதியுதவியும் செய்யவில்லை. அதே போல விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்துக்கு போய் விபத்தில் சிக்கி இறந்த காஞ்சிபுரம் தொண்டர் குடும்பத்துக்கும் பிரேமலதாவிடம் இருந்து வெறும் ஆறுதல் மட்டும் தான் கிடைத்தது. இது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

vijayakanth

விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால் இப்படியொரு நிலை இருக்கவே இருந்திருக்காது என புலம்பி வருகின்றனர் தேமுதிக தொண்டர்கள். 

2018 TopTamilNews. All rights reserved.