காடுவெட்டி குருவின் மகனை கைது செய்த காவல்துறை

 

காடுவெட்டி குருவின் மகனை கைது செய்த காவல்துறை

காடுவெட்டி குருவின் மகன் கனல் அரசை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வன்னியர் சமுதாய மக்களின் பலமான பிரபலமாகத் திகழ்ந்தவர் காடுவெட்டி குரு.இவரது இயற்பெயர் குருநாதன். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில், பிறந்தவர். இதனால் ஊர் பெயரையும் சேர்த்து காடுவெட்டி குரு என அழைக்கப்பட்டார். வன்னிய சமுதாயத்தினர் இவரை ‘மாவீரன் குரு’ என்று அழைப்பார்கள். இவர் ஆரம்ப கால கட்டத்தில் திமுகவில் இருந்தார்.1986-ல் காடுவெட்டியில் திமுகவின் கிளைச் செயலாளராக இருந்தார், தங்கள் பகுதியில் வன்னியர்களுக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இவருக்கு நெருங்கிய உறவினர். இதனால் பாமகவில் சேர்ந்தார்.பின்னர் வன்னியர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். 2001ல் ஆண்டிமடம் தொகுதியிலிருந்தும் 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். கடந்த 2018 அன்று உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தார்.

காடுவெட்டி குருவின் மகனை கைது செய்த காவல்துறை

இந்நிலையில் காடுவெட்டி ஜெ குருவின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் கனல் அரசு, ‘மாவீரன் மஞ்சள் படை’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இன்று (14/02/2021) கொடியேற்று விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்கு காவல்துறையில் உரிய முன் அனுமதி பெறப்படவில்லை. இதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் கொடியேற்ற வந்த கனல் அரசு மற்றும் ஆதரவாளர்கள் ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி கூட்டம் சேர்த்ததாக, அவர்களை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்