தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் தள்ளாதது ஏன்?- வீரமணி

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் தள்ளாதது ஏன்?- வீரமணி

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வரும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. இந்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாட்டிற்கு தனி நாணயம், ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு அதிரவைத்தார் நித்யானந்தா. இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் தள்ளாதது ஏன்?- வீரமணி

இந்நிலையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுகளுக்கே சவால் விடும் மோசடி சாமியாரான தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் தள்ளாதது ஏன்? மோசடி சாமியார்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய தயங்குவது ஏன்? இந்த சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படும் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் விரைவில் மேற்கொள்ளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.