“அரசியல் சூதாடிகளை தோலுரிப்போம்” – கொங்குநாடு சர்ச்சையில் கொந்தளித்த ஆசிரியர் வீரமணி!

 

“அரசியல் சூதாடிகளை தோலுரிப்போம்” – கொங்குநாடு சர்ச்சையில் கொந்தளித்த ஆசிரியர் வீரமணி!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என ஆட்சியாளர்களும் தொண்டர்களும் அழைத்து வருகின்றனர். இந்த வார்த்தையை விரும்பாத பாஜக தலைவர்கள் நேரடியாகவே ஏன் ஒன்றிய அரசு என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டனர். அதற்கு முதலமைச்சரோ அரசியலமைப்பு சட்டத்தி எப்படி இருக்கிறதோ அப்படி தான் அழைப்போம்; அழைத்துக்கொண்டே இருப்போம் என பதிலடி கொடுத்தார்.

“அரசியல் சூதாடிகளை தோலுரிப்போம்” – கொங்குநாடு சர்ச்சையில் கொந்தளித்த ஆசிரியர் வீரமணி!

இதனால் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் பிரதமர் மோடி இருப்பதாகவும் அதற்குத் தக்க பதிலடி கொடுக்க திட்டம் தயாராக இருப்பதாகவும் பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதாவது திமுக அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டின் மேற்கு மண்டலாமான கொங்கு மண்டலத்தைப் புதுச்சேரியை போல தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இயக்க தலைவர்களும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.

கொங்கு நாடு - தமிழ் விக்கிப்பீடியா

இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறுகையில், “சட்டப்பேரவை தேர்தலில் கொங்கு மண்டலப் பகுதியில் அதிமுக கூட்டணிக்கு ஓரளவு இடங்கள் கிடைத்துள்ளன. அதனால் அதை வைத்து திமுகவை தடுத்துவிடலாம், பாஜகவை எப்படியாவது அங்கு இடம்பிடிக்க வைக்கலாம் என்ற அதீத கற்பனையில் ஈடுபட்டு, கொங்குநாடு சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இந்த விஷம வித்தைகள், வியூகங்களில் ஈடுபடுவோருக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள்.

“அரசியல் சூதாடிகளை தோலுரிப்போம்” – கொங்குநாடு சர்ச்சையில் கொந்தளித்த ஆசிரியர் வீரமணி!

தமிழக மக்கள் இடையே சாதி வெறி, மத வெறியை தூண்டி வெற்றி பெறலாம் என்ற வீண் கனவு காண வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். இது பெரியார் மண். சூழ்ச்சிகளை, அரசியல் சூதாடிகளை அடையாளம் கண்டு தோலுரித்துக் காட்டி, விழிப்புணர்வு வெளிச்சத்தை காட்டும் திராவிடப் பொன்னாடு தமிழ்நாடு என்பதை உணர்த்த ஒருபோதும் தயங்காது” என்றார்.