“20 இடங்களை வாங்கிக்கொண்டு தமிழகத்தை ஆளப்போகிறோம் எனக் கூறுகிறார் அமித்ஷா”

 

“20 இடங்களை வாங்கிக்கொண்டு தமிழகத்தை ஆளப்போகிறோம் எனக் கூறுகிறார் அமித்ஷா”

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட கட்சி தலைவர் கி.வீரமணி, “234 இடங்களில் 20 இடங்களை பாஜகவிற்கு கொடுத்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு நாங்களே ஆள்வோம் என அமித்ஷா பிரச்சாரத்தில் கூறுகிறார். 20 இடங்களில் போட்டியிடுபவர்கள் எப்படி ஆள்வார்கள் என புரிந்து கொள்ள வேண்டும்.

“20 இடங்களை வாங்கிக்கொண்டு தமிழகத்தை ஆளப்போகிறோம் எனக் கூறுகிறார் அமித்ஷா”

கரையான் புற்றில் கருநாகம் நுழைந்தது போல, நம் வரிப்பணத்தில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரியில் வேற்று மாநிலத்தவர் படிப்பதா?. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றிய பெருமை தந்தை பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் உண்டு” எனக் கூறினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டணி தொகுதிப் பங்கீடு ,வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து, அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.