கிரிஜா வைத்தியநாதனுக்கு பதிலாக புதிய உறுப்பினர் நியமனம்!

 

கிரிஜா வைத்தியநாதனுக்கு பதிலாக  புதிய உறுப்பினர் நியமனம்!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மண்டல அமர்வுகளில் காலியாக உள்ள நீதித்துறை உறுப்பினர், தொழில்நுட்ப உறுப்பினர் ஆகிய இடங்களுக்கு உறுப்பினர்களை நியமித்து பசுமை தீர்ப்பாயம் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதன்படி, புனேவில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தின் மேற்கு மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பினராக எம்.சத்தியநாராயணன், தொழில்நுட்ப உறுப்பினராக கே.சத்யகோபால், சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கிரிஜா வைத்தியநாதனுக்கு பதிலாக  புதிய உறுப்பினர் நியமனம்!

கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்க தயாராகிக் கொண்டிருந்த வேளையில், பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவரது நியமனத்திற்குத் தடைவிதித்து அதிரடி காட்டியது. இச்சூழலில் சென்னை பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக சத்யகோபால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகளை நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினராக சத்யகோபால் இணைந்து விசாரித்தனர்.