சிஎஸ்கே அடித்த ட்விஸ்ட்… ஷாக்கான மற்ற அணிகள் – கிருஷ்ணப்பா கவுதம் ரூ.9.25 கோடிக்கு ஏலம்!

 

சிஎஸ்கே அடித்த ட்விஸ்ட்… ஷாக்கான மற்ற அணிகள் – கிருஷ்ணப்பா கவுதம் ரூ.9.25 கோடிக்கு ஏலம்!

கிருஷ்ணப்பா கவுதமின் ஆரம்ப விலைரூ.1 கோடியாக இருந்தது. அவரை ஏலம் எடுக்க கொல்கத்தாவும் ஹைதராபாத்தும் கடும் மோதல் போக்கு நிலவியது. விலை ரூ.7 கோடியை நெருங்கியபோது யாரும் எதிர்பாரா விதமாக ஏலத்துக்குள் சிஎஸ்கே நுழைந்தது.

சிஎஸ்கே அடித்த ட்விஸ்ட்… ஷாக்கான மற்ற அணிகள் – கிருஷ்ணப்பா கவுதம் ரூ.9.25 கோடிக்கு ஏலம்!

வந்தது மட்டுமல்லாமல் சட்டென ரூ.7.75 கோடிக்கு விலையை உயர்த்தியது. கொல்கத்தா விலகிக்கொண்டதையடுத்து சிஎஸ்கேவும் ஹைதராபாத்தும் அடித்துக்கொண்டன. இறுதியில் ரூ.9.25 கோடிக்கு கிருஷ்ணப்பா கவுதமை சிஎஸ்கே வாங்கியது. ஹர்பஜனை ஈடுசெய்யும் வகையில் கிருஷ்ணப்பா கவுதமை சிஎஸ்கே எடுத்திருக்கிறது. ஆப் ஸ்பின்னரான கவுதம் அவ்வப்போது பேட்டாலும் அதிரடி காட்டக் கூடியவர். கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக கிருஷ்ணப்பா கவுதம் விளையாடியது குறிப்பிடத்தக்கது.