“அதிமுக – பாஜக கூட்டணி காயலாங்கடை இன்ஜின்”

 

“அதிமுக – பாஜக கூட்டணி காயலாங்கடை இன்ஜின்”

திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக – மார்க்சிஸ்ட் கம்யூ. இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி எண்ணிக்கை அவர்கள் கூறியுள்ளார்கள் .அது எங்களுக்கு போதுமானதாக இல்லை என்று கூறி நாங்கள் மற்றொரு எண்ணிக்கையை அவர்களிடம் கூறியுள்ளோம். அவர்கள் கட்சித் தலைவரிடமும் கேட்டுவிட்டு முடிவு சொல்வதாக கூறி உள்ளார்கள்.

“அதிமுக – பாஜக கூட்டணி காயலாங்கடை இன்ஜின்”

எங்களின் மாநில செயற்குழு கூட்டத்தில் இது குறித்து கலந்து ஆலோசித்த பிறகு முடிவு சொல்வதாக நாங்களும் கூறியுள்ளோம். இன்று மாலை நடைபெறும் மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.

“அதிமுக – பாஜக கூட்டணி காயலாங்கடை இன்ஜின்”

தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், “அதிமுக – பாஜக கூட்டணி காயலாங்கடை இன்ஜின் மாதிரி; அது ஓடாது. கழண்டு போன இன்ஜின். அது அக்குவேரா ஆணிவேரா கழண்டு போய் இருக்குங்க ” என்றார்.