• February
    21
    Friday

Main Area

Main



பேராசிரியர் அன்பழகனின் 98-வது பிறந்த நாள்.. நேரில் சென்று மு.க ஸ்டாலின் வாழ்த்து !

k anbazhagan birthday
k anbazhagan birthday

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு இன்று 98 ஆவது பிறந்தநாள். வயது முதிர்வின் காரணமாக அன்பழகன் அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு யாரும் நேரில் வந்து வாழ்த்து சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். இருப்பினும், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டிற்குச் சென்று, பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோரும் சென்றிருந்தனர். 

ttn

பேராசிரியர் அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மு.க ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், " பேராசிரியர் - பொதுச்செயலாளர் மட்டுமல்ல; எனது பெரியப்பா! நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் - தன்மானம் ஊட்டிய தாய்; இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன்! 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்! " என்று உருக்கத்துடன் பதிவிட்டிருந்தார்.

 

மேலும், 'இனமான பேராசிரியரை எந்நாளும் வாழ்த்தி வணங்குவோம்' என்று அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.