புலி இன்னும் உயிருடன் இருக்கிறது….. காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை

 

புலி இன்னும் உயிருடன் இருக்கிறது….. காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை

2018ல் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் குறுகிய வெற்றி வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த கட்சியின் முக்கிய இளம் தலைவராக இருந்த ஜோதிராத்திய சிந்தியாவுக்கும், முதல்வர் கமல் நாத்துக்கும் இடையே மோதல் இருந்தது வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.

புலி இன்னும் உயிருடன் இருக்கிறது….. காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் முதல் ஒரு மாதம் தனி ஒரு ஆளாக மாநிலத்தை ஆட்சி செய்தார். கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் முறையாக மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதில் 2 பேர் சிந்தியா ஆதரவாளர்கள் (காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்). இந்நிலையில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று மத்திய பிரதேச அமைச்சரவையை மீண்டும் விரிவுபடுத்தினார். நேற்று 28 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதில் 12 பேர் சிந்தியாவின் ஆதரவாளர்கள். ஆக மத்திய பிரதேசத்தின் அமைச்சரவையில் மொத்தம் 14 அமைச்சர்கள் சிந்தியாவின் ஆதரவாளர்கள் உள்ளனர்.

புலி இன்னும் உயிருடன் இருக்கிறது….. காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை

மத்திய பிரதேசத்தில் 24 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது அவருடன் பா.ஜ.க.வுக்கு சென்ற எம்.எல்.ஏ.க்களுக்கு சவாலாக இருக்குமா என சிந்தியாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சிந்தியா கூறுகையில், அநீதிகளுக்கு எதிராக போராடுவது எங்களது பணி. அது போர் என்று அர்த்தம் கொண்டால் ஜோதிராதித்ய சந்தியா முன்னணியில் இருப்பான் கடந்த 2 மாதங்களாக என்னுடைய குணத்தை களங்கப்படுத்த சிலர் முயற்சி செய்தனர். திக்விஜய சிங் மற்றும் கமல் நாத்திடமிருந்து எனக்கு எந்த சான்றிதழும் தேவையில்லை. 15 மாதங்களாக மாநிலத்தை அவர்கள் எப்படி கொள்ளை அடித்தார்கள் என்பதற்கான உண்மைகள் மக்கள் முன் உள்ளது. புலி இன்னும் உயிருடன் இருக்கிறது என அவர்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு இப்போது உள்ளது. அவர் எப்போதும் பொது சேவையில் நம்பிக்கை கொண்டவர். அனைத்து 24 இடங்களையும் வெல்வோம் என நாங்கள் நம்புகிறோம். என தெரிவித்தார்.