மத்திய பிரதேச பெண்கள் மற்றும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ்.. சிந்தியா விளாசல்

மத்திய பிரதேச பெண்கள் மற்றும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ்.. சிந்தியா விளாசல்

மத்திய பிரதேச இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என பா.ஜ.க. எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா கடுமையாக விமர்சனம் செய்தார்.

மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பா.ஜ.க. எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இன்று அவர்கள் (காங்கிரஸ்) ஜோதிராதித்ய சிந்தியா துரோகி என்று சொல்கிறார்கள். அவர்களிடம் என் கேள்வி என்னவென்றால், ஆட்சிக்கு வந்ததும் 10 நாட்களில் விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாக வாக்குறுதி கொடுத்தீர்கள் ஆனால் அதை ஏன் செயல்படுத்தவில்லை?.

மத்திய பிரதேச பெண்கள் மற்றும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ்.. சிந்தியா விளாசல்
ஜோதிராதித்ய சிந்தியா

விவசாயிகளின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த கட்சிதான் அது, அவர்கள் விசுவாசமற்றவர்கள் மட்டுமல்ல அவர்கள் (காங்கிரஸ்) துரோகிகள். மாநில அரசு கன்யாதான் யோஜானா திட்டத்தின்கீழ், புதிதாக திருமணம் செய்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்குகிறது. அவர்கள் (காங்கிரஸ்) ரூ.51 ஆயிரம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் ஒரு ஆண்டு தாண்டிய பிறகும் திருமணமானவர்களுக்கு பணம் போய் சேரவில்லை.

மத்திய பிரதேச பெண்கள் மற்றும் விவசாயிகளின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ்.. சிந்தியா விளாசல்
கன்யாதான் யோஜானா

தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு துரோகம் செய்தவர்கள், அவர்கள் (காங்கிரஸ்) நம்பிக்கையற்றவர்கள் மட்டுமல்ல ஆனால் துரோகிகள். அவர்கள் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் அலவென்ஸாக ரூ.4 ஆயிரம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதி எங்கே மறைந்தது? இவ்வாறு அவர் பேசினார். எதிர்வரும் இடைத்தேர்தலில் சான்வர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க.வின் துளசி சிலாவத்துக்கா சிந்தியா அங்கு பிரச்சாரம் செய்தார்.