அமைச்சரவை விரிவாக்கம் முதல்வரின் விருப்பம்…. ஜோதிராதித்ய சிந்தியா தகவல்

 

அமைச்சரவை விரிவாக்கம் முதல்வரின் விருப்பம்…. ஜோதிராதித்ய சிந்தியா தகவல்

மத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் விருப்பம் என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக இருந்த 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 3ம் தேதியன்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் 19 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரஸ் 9 இடங்களில் வென்றது. இடைத்தேர்தலில் பா.ஜ.க. 49.5 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. அதேசமயம் காங்கிரசோ 40.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது.

அமைச்சரவை விரிவாக்கம் முதல்வரின் விருப்பம்…. ஜோதிராதித்ய சிந்தியா தகவல்
பா.ஜ.க.

மத்திய பிரதேச இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்கவைத்து கொண்டது. மேலும், காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்கு தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவும் தனது செல்வாக்கை நிருபித்து காட்டி விட்டார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து சிவ்ராஜ் சிங் சவுகான் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமைச்சரவை விரிவாக்கம் முதல்வரின் விருப்பம்…. ஜோதிராதித்ய சிந்தியா தகவல்
சிவ்ராஜ் சிங் சவுகான்

இந்த சூழ்நிலையில் நேற்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை ஜோதிராதித்ய சிந்தியா திடீரென சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் சிவ்ராஜ் சிங் சவுகானை சந்திப்பதற்கு முன் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் கூறுகையில், வளர்ச்சி மற்றும் அது தொடர்பான திட்டங்கள் குறித்து நான் முதல்வரை சந்திக்கிறேன். மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எந்த விவாதமும் இருக்காது. அது முதலமைச்சரின் விருப்பம் என்று தெரிவித்தார்.