பாபர் மசூதி விவகாரம்.. தனது தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பது காங்கிரசுக்கே தெரியாது… ஜோதிராதித்ய சிந்தியா

 

பாபர் மசூதி விவகாரம்.. தனது தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பது காங்கிரசுக்கே தெரியாது… ஜோதிராதித்ய சிந்தியா

ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்த பிறகு நேற்றுதான் இந்தூருக்கு முதல் முறையாக வந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில கேபினட் அமைச்சர் துளசி சிலாவாத், எம்.பி. சங்கர் லாவானி மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்றனர். ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஒரு பக்கம் அவர் (முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்) பாபர் மசூதி பூட்டுக்களை அவர் (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி) திறந்ததாக கூறுகிறார். அதேசமயம் மறுபுறம் ராஜீவ் காந்தி பாபர் மசூதி பூட்டுக்களை திறக்கவில்லை என சசி தரூர் கூறுகிறார். ஆக தனது தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பது காங்கிரசுக்கே தெரியவில்லை.

பாபர் மசூதி விவகாரம்.. தனது தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பது காங்கிரசுக்கே தெரியாது… ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய பிரதேசத்தில் நிலவரம் தற்போதை கொரேனா வைரஸ் நிலவரத்துக்கு முன்னாள் கமல் நாத் அரசுதான் காரணம், தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. முதல்வராக பதவியேற்ற பிறகு சிவ்ராஜ் சிங் சவுகான் தினமும் 18 முதல் 20 மணி நேரம் பணியாற்றி நிலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். ஊழலை நான் இங்கு பார்த்த அளவு,குறைந்தபட்சம் எனது 20 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது போன்ற பதிவுகளை நான் பார்த்ததில்லை. ஊழல், கொடுங்கோன்மை, மற்றும் போலி அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட 22 எம்.எல்.ஏ.க்கள் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுக்க காரணம்.

பாபர் மசூதி விவகாரம்.. தனது தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பது காங்கிரசுக்கே தெரியாது… ஜோதிராதித்ய சிந்தியா

2002ம் ஆண்டு முதல் மக்கள் சேவகனாக இருக்கிறேன், தொடர்ந்து அப்படி ஒருவனாக இருப்பேன். வாழ்க்கையில் எங்கள் குறிக்கோள் நாற்காலி (அதிகாரம்) பெறும் விளையாட்டில் இறங்குவதல்ல, மாறாக பொதுமக்களின் இதயங்களையும், மரியாதையையும் வெல்வது. சச்சின் பைலட் எனது நண்பர். அவர் வலியை எவ்வளவு தாங்கி கொண்டார் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் அண்மையில் பேட்டி ஒன்றில், 1985ல் ராமஜென்ம பூமி கதவுகளை ராஜீவ் காந்தி திறந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என கூறினார். அந்த நேரத்திலிருந்து ஒரு உணர்வு ( ராமர் கோயில் கட்டுவதற்கு) வெளிப்பட்டது. யாராவது அதற்கான நற்பெயரை வாங்க முயற்சித்தால் அது தவறாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.