மத்திய பிரதேச அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடனை விட்டு சென்ற கமல் நாத்.. சிந்தியா குற்றச்சாட்டு

மத்திய பிரதேச அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடனை விட்டு சென்ற கமல் நாத்.. சிந்தியா குற்றச்சாட்டு

மத்திய பிரதேச அரக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடனை முன்னாள் முதல்வர் கமல் நாத் விட்டு சென்றார் என ஜோதிராதித்ய சந்தியா குற்றச்சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் மோரினாவில் நடைபெற்ற நலத்திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய பிரதேச மக்களுக்கு யாராவது துரோகம் செய்தார்கள் என்றால் அது கமல் நாத் மற்றும் திக் விஜயசிங்குதான்.

மத்திய பிரதேச அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடனை விட்டு சென்ற கமல் நாத்.. சிந்தியா குற்றச்சாட்டு
ஜோதிராதித்ய சிந்தியா

அவர்கள் 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தபோதும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. சிவ்ராஜ் சிங் சவுகான் அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடனை விட்டு சென்றார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். அந்த விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார்.

மத்திய பிரதேச அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடனை விட்டு சென்ற கமல் நாத்.. சிந்தியா குற்றச்சாட்டு
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில், எந்த சாதி அல்லது மதத்தினராக இருந்தாலும் இதுவரை ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை பெறாதவர்கள், செப்டம்பர் 16ம் தேதி முதல் அவர்கள் பெற தொடங்குவார்கள். இனி பட்டினி கிடையாது என தெரிவித்தார்.