• April
    05
    Sunday

Main Area

Main



தலைவர் 168 படத்தில் இணையும் இரண்டு ஹீரோயின்கள்!?

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தலைவர் 168 படத்தில்  இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

thalaivar

இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு  ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.

 

rajini

இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது  ரஜினிகாந்த் ஆன்மீக பயணம் சென்றுள்ள நிலையில் அவர் சென்னை திரும்பியதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jo

முன்னதாக இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக தகவல்களும்  வெளியாகியுள்ளன. ஏற்கனவே சிவா - அஜித் கூட்டணியில் உருவான விஸ்வாசம் படத்துக்கு டி. இமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.