‘#JusticeForNirbhaya’ ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்குகள்!

 

‘#JusticeForNirbhaya’ ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்குகள்!

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த வழக்கின் குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறுவன் என்பதால் அவரும் விடுதலை செய்யப்பட்டார். எஞ்சியிருக்கும் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் படி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

trt

இந்த வழக்கு விசாரணை கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், அவர்களைத் தூக்கிலிடும் தேதியை நீதிமன்றம் அறிவித்தது. இதனிடையே குற்றவாளிகள் 4 பேரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு எழுதியதால். மூன்று முறை அவர்கள் தூக்கிலிடப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தது. அதன் பின்னர், குற்றவாளிகளின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் மார்ச் 20 (இன்று) தூக்கிலிடப்படுவார்கள் என்று உறுதியானது. 

ttn

அதன் படி இன்று காலை 5:30 மணிக்குக் குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதற்கு நிர்பயாபின் தாயார் கண்ணீர் மல்க, 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயாவின் மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளது என்றும் தனக்கு அதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ட்விட்டரில், #NirbhayaVerdict, #NirbhayaJustice, #NirbhayaCase, #nirbhayaconvicts, #JusticeForNirbhaya ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. நிர்பயா குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனை வழங்கப்பட்டது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.