`இது அட்டூழியம்; நீதி வேண்டும்!’- சாத்தான்குளம் விவகாரத்தில் குரல் கொடுக்கும் ஷிகர் தவான்

 

`இது அட்டூழியம்; நீதி வேண்டும்!’- சாத்தான்குளம் விவகாரத்தில் குரல் கொடுக்கும் ஷிகர் தவான்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மீது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியத்தை கேள்விப்பட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன் என்றும் குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தர வேண்டும்” என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குரல் கொடுத்துள்ளார்.

`இது அட்டூழியம்; நீதி வேண்டும்!’- சாத்தான்குளம் விவகாரத்தில் குரல் கொடுக்கும் ஷிகர் தவான்

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மக்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வேலையை இழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுவிட்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு இல்லாவிட்டாலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் சில நாட்களுக்கு முன்பு தனது செல்போன் கடையை கூடுதலாக 5 நிமிடம் திறந்து வைத்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடுமையாக தாக்கிய சாத்தான்குளம் போலீஸார், சிறையில் அடைத்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் தந்தை, மகன் இறந்துவிட்டனர். இந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமின்றி இந்திய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

`இது அட்டூழியம்; நீதி வேண்டும்!’- சாத்தான்குளம் விவகாரத்தில் குரல் கொடுக்கும் ஷிகர் தவான்

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காட்டமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது நிகழ்த்தப்பட்ட அட்டூழியத்தை கேள்விப்பட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொடூர சம்பவத்திற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும், அவர்களது குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தர வேண்டும்” என கூறியுள்ளார்.