• July
    22
    Monday

Main Area

Main



காதலரை கரம்பிடித்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா

saina
saina
Loading...

மும்பை: பேட்மிண்டன்  வீராங்கனை சாய்னா நேவாலுக்கும் காதலரும் சக டென்னிஸ் வீரருமான காஷ்யபிற்கும் மும்பையில் திருமணம் நடந்தது.

இந்தியாவின் முன்னணி  பேட்மிண்டன்  வீராங்கனையாகத் திகழ்பவர், சாய்னா நேவால். கடந்த 2012-ம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாய்னா அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளையும், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். இவர் தனது சக  பேட்மிண்டன்  வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை, 'பெஸ்ட் மேட்ச் ஆஃப் மை லைஃப்' என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார் காஷ்யப். 

முன்னதாக இருவரும் காதலித்து வந்ததாகச் செய்திகள் எழுந்த நிலையில் இருவரும் இது பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்தனர்.ஆனால் சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தனர். 2007-லேயே இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது என்று சாய்னா நெவால் தெரிவித்திருந்தார். சமீபத்தில் ஜகார்த்தாவில் ஆசியப் போட்டிகளில் வெண்கலம் வென்ற சாய்னா, உலக  பேட்மிண்டன்  தரவரிசையில் 9ம் இடத்தில் உள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.