”ஜூலை- செப். காலாண்டில் 5.3 கோடி ஃபோன்கள் விற்பனை – சாம்சங் முதலிடம் !’

 

”ஜூலை- செப். காலாண்டில் 5.3 கோடி ஃபோன்கள் விற்பனை – சாம்சங் முதலிடம் !’

கடந்த ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவில் 5 கோடியே 30 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளது. இதில் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

”ஜூலை- செப். காலாண்டில் 5.3 கோடி ஃபோன்கள் விற்பனை – சாம்சங் முதலிடம் !’

இது தொடர்பாக கவுன்டர் பாயிண்ட் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவில் முன்எப்போதும் இல்லாத வகையில் மொத்தம் 5 கோடியே 30 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளது. வருடாந்திர அடிப்படையில் பார்க்கும்போது இந்த காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 9 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த விற்பனையில் 24 சதவீத பங்குடன் சாம்சங் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சாம்சங் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளதாக கவுன்டர் பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

”ஜூலை- செப். காலாண்டில் 5.3 கோடி ஃபோன்கள் விற்பனை – சாம்சங் முதலிடம் !’

இதனிடையே தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த சியோமி நிறுவனம், 23 சதவீத பங்குடன் 2வது இடத்திலும், விவோ நிறுவனம் 16 சதவீத பங்குடன் 3வது இடத்திலும், 15 சதவீத பங்குடன் ரியல்மி 4வது இடத்தையும், 10 சதவீத பங்குடன் ஒப்போ 5வது இடத்தையும் பிடித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விற்பனையை அதிகரிக்க செல்போன் நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சி மற்றும் ஆன்லைன் விற்பனையில் ஏற்பட்ட கணிசமான உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஸ்மார்ட்போன் விற்பனை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக கவுன்டர் பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது .

  • எஸ். முத்துக்குமார்