கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடியில் ஒரு வாரத்திற்கு முழுபொதுமுடக்கம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடியில் ஒரு வாரத்திற்கு முழுபொதுமுடக்கம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் பழனிசாமி நேரில் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி, மதுரை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிர படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன் படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடியில் ஒரு வாரத்திற்கு முழுபொதுமுடக்கம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு வீச்சில் அம்மாவட்ட ஆட்சியர் ஈடுபட்டு வருகிறார். அம்மாவட்டத்தின் ஜூஜூவாடி என்னும் பகுதியில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜூஜூவாடி பகுதியில் இன்று முதல் 1 வாரத்துக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.