உங்க குழந்தை கொழு கொழுன்னு ,மொழு மொழுன்னுருக்க ,இந்த பழ ஜூஸ் கொடுத்து பழகுங்க .

 

உங்க குழந்தை  கொழு கொழுன்னு ,மொழு மொழுன்னுருக்க ,இந்த பழ ஜூஸ் கொடுத்து பழகுங்க .

“என் குழந்தை வாயில் எதையும் வாங்குவதில்லை, வாயில் வைத்தவுடனே துப்புகிறது” என்று பல தாய்மார்கள் கூறுவார்கள். அதன் அடிப்படை என்னவென்றால் பால் உறிஞ்சி குடித்தக் குழந்தைக்கு உணவை நாக்கை மடித்து உள்செலுத்த இன்னும் பழகவில்லை, புதிய உணவு, புதிய சாப்பிடும் முறை, இவை இரண்டும் பழகுவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனை உணவு ஊட்டுபவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். மேலும் குழந்தைசாப்பிடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும், இதற்கு தாய்க்கு மிகுந்த பொறுமை அவசியம்.

முற்காலத்தில் அம்மா, பாட்டி உணவு ஊட்டும் பொழுது காக்கா நரிக்கதை, நீதிக்கதைகள் சொல்லி உணவு ஊட்டுவார்கள்.இதனால் சிந்திக்கும் திறன், கவனிக்கும் ஆற்றல், கூடி வாழும் கலை, நற்பண்புகள் ஆகியவை உணவுடன் சேர்த்து ஊட்டப்பட்டது.ஆனால் தற்காலத்தில் மொபைல் / டீவி / லேப்டாப் கார்ட்டூன்கள் காட்டி உணவு கொடுக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.இதனால் குழந்தைக்கு உணவின் ருசி, அதை சாப்பிடும் முறை போன்றவை தெரியாமலே போகிறது, இதே பழக்கம் வளர்ந்த பின்னும் தொடர்கிறது.இந்த பழக்கத்தால் சிறு குழந்தையிலிருந்தே உடல் பருமன் உண்டாகிறது என்ற உண்மை நிறைய பேர் உணர்வதில்லை.

பழங்களில் ஏராளமான சத்துகள் உள்ளன. ஆனால், சிலருக்கு ஜூஸ், ஸ்மூத்தியாக குடித்தால்தான் பிடிக்கும். சத்தும் சுவையும் நிறைந்த ஜூஸ், ஸ்மூத்தி இப்போது ஹாட் ஃபேஷன். உடலுக்குப் புத்துணர்வு ஊட்டும் பழச்சாறு எப்படி செய்வது என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விட்டிலே கிடைக்க கூடிய பொருட்களை வைத்து 3-5 நிமிடங்களுக்குள் தயார் செய்து விடலாம். அவ்வளவும் ஹெல்திஅவ்வளவும் டேஸ்டி

சில்சில்கூல்கூல்ஹெல்தி டிரிங்க்ஸ்

#1. கேரட் மாதுளை ஆப்பிள் ஜூஸ்

தேவையானவை

தோல் சீவிய கேரட் – 1

உதிர்த்த மாதுளை – 2 பழம்

தோல் சீவிய ஆப்பிள் – ½ பழம்

நட்ஸ் பொடி (முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் பொடித்தது) – 1 டேபிள் ஸ்பூன்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.

கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம்.

தேவைப்பட்டால் தேன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கலாம்.

பலன்கள்

சருமத்துக்கு மிகவும் நல்லது.

விட்டமின் சி கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பார்வைத் திறன் மேம்படும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றது.

முதியவர்களுக்கும் நன்மையைத் தரும்.

எனர்ஜி கிடைக்கும்.

உடலில் ரத்தம் உற்பத்தியாகும்.

ரத்தசோகை நீங்கும்.

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

உங்க குழந்தை  கொழு கொழுன்னு ,மொழு மொழுன்னுருக்க ,இந்த பழ ஜூஸ் கொடுத்து பழகுங்க .

#2. பலாப்பழம் நட்ஸ் ஸ்மூத்தி

தேவையானவை

பலாப்பழம் – 10

தேங்காய்ப் பால் – 1 டம்ளர்

பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) – 1 ஸ்பூன்

தேன் சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)

செய்முறை

முதலில் பலாப்பழத்தையும் தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

அதில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும்.

இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.

இயற்கையாகவே பலாப்பழம் இனிக்கும் என்பதால் 8 – 12 மாத குழந்தைகளுக்கு இதை அப்படியே கொடுக்கலாம்.

தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்டவர்கள் சாப்பிடலாம்.

பலன்கள்

மல்டிவிட்டமின்கள் சத்துகள் உடையது.

நல்ல கொழுப்பு இருக்கிறது.

ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

மாலை நேரம் அல்லது காலை 11.30 மணியளவில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

#3. மாங்காய் தயிர் ஸ்மூத்தி

தேவையானவை

மாங்காய் – 25 கிராம்

தயிர் – 1 டம்ளர்

இந்துப்பு – 1 சிட்டிகை

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

நறுக்கிய புதினா – 1 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி – ½ டீஸ்பூன்

பாலிஷ் போடாத பிரவுன் சுகர் சுவைக்கேற்ப

செய்முறை

மாங்காயை வேக வைத்துத் தோல் உரித்துக் கொள்ள வேண்டும்.

சதையை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் போடவும்.

இதில் மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

இந்த ஸ்மூத்தி கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம். மேலே புதினா இலைகளைத் தூவி தரலாம்.

பலன்கள்

வயிற்றுக்கு நல்லது.

நல்ல பாக்டீரியா உடலில் உருவாகும்.

இதயம், ரத்த நாளங்களுக்கு நல்லது.

புதுமையான சுவையில் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தரலாம்.