5ஜி நெட்வொர்க்கால் மனிதர்களுக்கு ஆபத்து? – வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை!

 

5ஜி நெட்வொர்க்கால் மனிதர்களுக்கு ஆபத்து? – வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை!

உலகளவில் தொலைத்தொடர்பு மிக வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. அதற்கான தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று உலகமே நம் கைகளில் இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கியதில் தொலைத்தொடர்பு துறைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. இந்தியாவில் தற்போது 4ஜி அதாவது நான்காம் தலைமுறை இணையதள வசதியைப் பயன்படுத்தி வருகிறோம். 3ஜி விட 4ஜி வேகம் அதிகமாக இருந்தாலும் நமக்கு அந்த வேகமும் போதவில்லை என்பதை உணர்கிறோம். ஆகவே 5ஜி தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது.

5ஜி நெட்வொர்க்கால் மனிதர்களுக்கு ஆபத்து? – வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை!

சீனா, அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகள் 5ஜி சோதனையைத் தொடங்கி நடைமுறைக்கு கொண்டுவரவிருக்கின்றன. இந்தியாவில் சோதனை மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 5ஜி சோதனை செய்ய ஏர்டெல், ஜியோ, வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவங்கள் சீனா அல்லாத வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து சோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதற்கான அலைக்கற்றையும் ஒதுக்கியிருக்கிறது. ஜியோ சொந்தமாகவே சோதனை மேற்கொள்ளவிருக்கிறது. டெல்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த ஆய்வு சுமார் ஆறு மாதங்கள் நடைபெறும்.

5ஜி நெட்வொர்க்கால் மனிதர்களுக்கு ஆபத்து? – வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை!

இச்சூழலில் சுற்றுச்சுழல் ஆர்வலரும் நடிகையுமான ஜுஹி சாவ்லா இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “புதிய தொழில்நுட்பத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. புதுப்புது தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளியாகும் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

5ஜி நெட்வொர்க்கால் மனிதர்களுக்கு ஆபத்து? – வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை!


எனினும் இந்தச் சாதனங்கள் குறித்து ஒருவித குழப்பத்தில் இருக்கிறோம். வயர்லெஸ் சாதனங்களாலும் செல்போன் டவர்களாலும் வெளியிடப்படும் ரேடியோ கதிர்களால் மனிதர்களுக்கு ஆபத்து இருப்பதை நாங்கள் ஆய்வின் வழியைக் கண்டறிந்துள்ளோம்
ஆகவே இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு 5ஜி தொழில்நுட்பத்தால் மக்கள், பறவைகள், விலங்குகள், இயற்கை ஆகியவற்றுக்கு ஆபத்து இல்லை என்று சான்றளிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.