தந்தை – மகன் கொலை வழக்கில் கைதான காவலர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைப்பு!

தந்தை – மகன் கொலை வழக்கில் கைதான காவலர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன்,  சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

தந்தை – மகன் கொலை வழக்கில் கைதான காவலர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைப்பு!

இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தந்தை – மகன் கொலை வழக்கில் கைதான காவலர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைப்பு!

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டுள்ளார்.

தந்தை – மகன் கொலை வழக்கில் கைதான காவலர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைப்பு!
இதனிடையே தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்வோம் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.