ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றன. ஆனால் இதில் பல முரண்பாடுகள் உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் எதிராக சரண்யா, பரமேஸ்வரன் என்பவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு!

மாணவர்கள் கண் பாதிக்கப்படுவதாகவும் ஆபாச இணையத்தளங்களை பார்க்க நேரிடும் எனவும் ஆன்லைன் வகுப்புக்கு எதிராக வாதம் வைக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே மத்திய அரசு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.