பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

பிரஷாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேதியைக் குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தலைமை நீதிபதி பப்டே நாக்பூரில் பா.ஜ.க பிரமுகரின் மகனின் பல லட்ச மதிப்புள்ள பைக் ஒன்றை ஓட்டியதாக பிரஷாந்த் பூஷன் சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவை வெளியிட்டார். இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.

பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், தான் மன்னிப்பு கேட்க முடியாது. தண்டனையை ஏற்கத் தயார் என்றார். இன்று இந்த வழக்கில் தண்டனை தொடர்பான விவாதம் நடந்தது.

பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் வாதாடும்போது, இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் மன்னிப்பு கேட்ட வேண்டும். அவரை எச்சரித்து விடுவிக்கலாம் என்று கூறினார். பிரஷாந்த் பூஷனுக்கு பிற்பகல் வரை நீதிமன்றம் தரப்பில் அவகாசமும் வழங்கப்பட்டது. அதற்குள் அவர் தன்னுடைய எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்.
ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

இதைத் தொடர்ந்து இன்று நடந்த வழக்கு விவாதத்தின் போது, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் போன்றோர் வெளியிடும் சிறிய கருத்தும் பெரிதாக பார்க்கப்படும். நீதித்துறையைச் சார்ந்தோர் கூறும் கருத்து மக்களிடையே நீதித்துறை மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்யும். உச்ச நீதிமன்றத்தை நாம் ஒருவருக்கொருவர் அவமதிக்கத் தொடங்கினால், அதன் மீது எப்படி நம்பிக்கை வரும் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.