‘சேனலை மாற்றிக் கொள்ளுங்கள்’ : சமஸ்கிருத செய்தி வழக்கில் நீதிபதிகள் கருத்து!

 

‘சேனலை மாற்றிக் கொள்ளுங்கள்’ : சமஸ்கிருத செய்தி வழக்கில் நீதிபதிகள் கருத்து!

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்புவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

பொதிகை உள்ளிட்ட மாநில தொலைக்காட்சிகளில் தினமும் 15 நிமிடம், தூர்தர்ஷன் வெளியிடும் சமஸ்கிருத செய்தித் தொகுப்பை வெளியிட வேண்டும் என அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மொழி திணிப்பில் மத்திய அரசு எல்லை மீறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்த தமிழகத்தை சேர்ந்தோர், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமஸ்கிருதத்தில் செய்திக்கு எதிராக பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் கூட நடந்தது.

‘சேனலை மாற்றிக் கொள்ளுங்கள்’ : சமஸ்கிருத செய்தி வழக்கில் நீதிபதிகள் கருத்து!

இந்த நிலையில், சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்புவதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு தேவை இல்லை எனில் தொலைக்காட்சியை அனைத்து வைத்துக்கொள்ளலாம். இல்லையெனில் சேனலை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிகள், இதைவிட முக்கிய பிரச்சனைகள் பல இருப்பதாக கருத்து தெரிவித்தனர். மேலும், தேவையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.