இனி “மை லார்ட்” என்று சொல்லாதீர்கள் : தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

இனி “மை லார்ட்” என்று சொல்லாதீர்கள் : தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

நாட்டின் வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை அழித்தால் மக்களின் உணவை பறிக்கும் செயலாக மாறிவிடும் என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இனி “மை லார்ட்” என்று சொல்லாதீர்கள் : தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

அருப்புக்கோட்டை திருச்சுழியில் முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இதில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி காணொலி காட்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ நில மற்றும் காலனித்துவ முறையை குறிக்கும் மை லார்ட், லார்ட்ஷிப் என நீதிபதியை கூறுவதை கைவிட வேண்டும். மரியாதையாக சார் என்று கூறினாலே போதும். நாட்டின் வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை அழித்தால் மக்களின் உணவை பறிக்கும் செயலாக மாறிவிடும். நீதியை நாடுபவர்களுக்கு உகந்ததாக நீதிமன்றங்கள் இருக்க வேண்டும்; நீதிபதிகளின் அணுகுமுறையும் மாற வேண்டும்” என்றார்.

இனி “மை லார்ட்” என்று சொல்லாதீர்கள் : தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

தொடர்ந்து பேசிய அவர், ” கண்ணுக்கு தெரியாத கிருமி மனித உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனால் நாம் இயற்கையோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும். அதே சமயம் விலங்குகளையும், இயற்கையையும் காக்க வேண்டும். நீதிபதிகள் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அதிகாரத்தை வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.நீதிமன்றங்கள் அணுகுவதற்கு எளிதாக இருக்க வேண்டும்” என்றார்.