பா.ரஞ்சித் வழக்கில் இறுதி விசாரணை தேதியை குறித்த நீதிபதி

 

பா.ரஞ்சித் வழக்கில் இறுதி விசாரணை தேதியை குறித்த நீதிபதி

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் கடந்த 2019ம் ஆண்டில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர்பாரூக் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித், மன்னர் மறைந்த மன்னர் ராஜராஜ சோழனை அவன் இவன் என்று இழிவாகப் பேசினார். ராஜராஜ சோழன் ஒரு அயோக்கியன் அவன் ஆட்சி காலத்தில் தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவன் ஆட்சி காலம் இருண்ட காலம். டெல்டா பகுதியில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது என்று பேசினார்.

பா.ரஞ்சித் வழக்கில் இறுதி விசாரணை தேதியை குறித்த நீதிபதி

பா. ரஞ்சித்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது . ராஜராஜ சோழனை அவதூறாக பேசியது, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் சாதிகளுக்கு இடையே பிரிவினையையும் பிளவுபடுத்தும் விதத்திலும் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று திருவிடைமருதூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ராஜராஜசோழனை விமர்சித்த ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர்.

பா ரஞ்சித் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார் பா. ரஞ்சித்.

பா.ரஞ்சித் வழக்கில் இறுதி விசாரணை தேதியை குறித்த நீதிபதி

இந்த வழக்கின் விசாரணையில் பேசிய பா. ரஞ்சித், வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் தான் அப்படி பேசினேன். இந்த தகவலை பலரும் பேசி இருக்கின்றனர். ஆனால் என்னுடைய பேச்சை மட்டும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. அதனால் வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறினார். ஆனால் அரசு தரப்பில் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது .

பின்னர் வழக்கு விசாரணைக்கு பின்னர், இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது . அப்படி பேசினால் தொடர்புடைய கீழமை நீதிமன்றம் முன்ஜாமீனை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

பா.ரஞ்சித் வழக்கில் இறுதி விசாரணை தேதியை குறித்த நீதிபதி

இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரி மேலும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது கருத்தில் எந்த சமூகத்திற்கு எதிராகவும் அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மட்டுமே பேசினேன். எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. அதனால் என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பது ஒரு வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பேச்சுரிமை உள்ளது. ஆனால் இருதரப்பு இடையே அமைதியின்மையை ஏற்படுத்த கூடாது என்ற சட்டம் இருக்கிறது. தலித் மக்களின் நிலங்களை ராஜராஜசோழன் அபகரித்துக் கொண்டான் என்று கூறியதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? பொதுவான கருத்துகளை இப்படிக் கூற வேண்டாம். பேசியதன் உள்நோக்கம் என்ன? அதற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்? என்று நீதிபதி பாரதிதாசன் கேள்வி எழுப்பினார்.

பா.ரஞ்சித் வழக்கில் இறுதி விசாரணை தேதியை குறித்த நீதிபதி

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் தனது கருத்தினை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளங்கோவன் கருத்து தெரிவித்திருப்பதால், இதற்கு தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிடுட்டுள்ளார். மேலும் வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.