• February
    25
    Tuesday

Main Area

Main



சீரியல்களால் சீரழிகிறது குடும்பங்கள் ! நீதிபதி கிருபாரன் மேடையில் பேச்சு !

SirRamasamy
SirRamasamy

தொலைக்காட்சித் தொடர்களால் பல பெண்கள் வாழ்க்கை சீரழிந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

 

ராஜா சர் ராமசாமி முதலியார் அவர்களின் 179வது பிறந்த நாள் விழா சென்னை கீழ்ப்பாக்கம் பாலவிஹார் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி கிருபாகரன் ராமசாமி முதலியார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ரூ.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் பேசினார்.

judgekirupakaran

தற்போது பொதுமக்களுக்கு சேவை செய்வதாக வரும் பலர் தங்களது குடும்பத்தின் நலனை மட்டுமே யோசிக்கிறார்கள். ஆனால் ராமசாம முதலியார் பொதுவாழ்க்கையின் மூலம் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு தந்தவர் என புகழாரம் சூட்டினார். அரசியல்வாதிகளும் ராமசாமி முதலியாரை முன்னோடியாக நினைத்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

காவல்துறையில் உண்மையாக உழைக்க வேண்டும் என பலர் உள்ளனர். ஆனால் சிலர் பணம் பெற்றுக்கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யத் தயராக உள்ளனர்.

மேலும் டி.வி. சீரியல்களை பார்த்து பல பெண்கள் தங்களது குடும்பத்தை சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டிய நீதிபதி கிருபாகரன், பெண்களால் மட்டுமே ஒரு குடும்பத்தை மிக சிறந்த, ஒழுக்கமான குடும்பமாக உருவாக்க முடியும் என்றார். நம்முடைய பெற்றோரை மதிப்பது போலவே கணவனின் பெற்றேரை பெண்கள் மதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எதிர்மறை சிந்தனை இருந்தால் எதிர்மறையான விளைவுகள் தான் நடக்கும். நல்லது நினைத்தால், நம்மை சுற்றி நல்லவர்கள் இருந்தால் நன்மைகள் நடக்கும் என்று பேசினார்.

சென்னை மாகாணத்தின் செரீப்பாக இருந்த ராஜா சர் ராமசாமி முதலியார், சென்னையில் பல்வேறு இடங்களில் சத்திரங்களை தொடங்கினார். இதைத்தொடர்ந்து ராமசாமி முதலியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனைகள், பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லம், மனநலம் குன்றியோர் காப்பகம் போன்றவை தொடங்கப்பட்டது. தற்போது இந்த சொத்துக்களை தமிழக அரச சார்பில் சொத்தாட்சியர் அலுவலகம் நிர்வகித்து வருகிறது.

 

2018 TopTamilNews. All rights reserved.