மரண அடி வாங்கிய ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்…. லாபம் ரூ.242 கோடியாக வீழ்ந்தது…

மரண அடி வாங்கிய ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்…. லாபம் ரூ.242 கோடியாக வீழ்ந்தது…

ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பு கொண்ட ஜே.எஸ்.டபிள்யூ. குழுமத்தின் முதன்மை வர்த்தக நிறுவனம்தான் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல். இந்நிறுவனம் உருக்கு (ஸ்டீல்) பொருட்கள் தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

மரண அடி வாங்கிய ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்…. லாபம் ரூ.242 கோடியாக வீழ்ந்தது…

ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.242 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 86 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.1,727 கோடி ஈட்டியிருந்தது.

மரண அடி வாங்கிய ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்…. லாபம் ரூ.242 கோடியாக வீழ்ந்தது…

2020 மார்ச் காலாண்டில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த வருவாயும் குறைந்துள்ளது. அந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.15,020 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் ரூ.19,418 கோடி ஈட்டியிருந்தது. விற்பனை குறைந்ததே வருவாய் சரிவுக்கு முக்கிய காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.