அமித்ஷாவுக்கு பதில் நட்டா தமிழகம் வருகிறார்!

 

அமித்ஷாவுக்கு பதில் நட்டா தமிழகம் வருகிறார்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன. தற்போது கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியானது. அதேபோல் பாஜக -அதிமுகவுடனான கூட்டணியும் உறுதியாகியுள்ளது. ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதனை பாஜக தலைமையே அறிவிக்கும் என அக்கட்சி நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.

இதனிடையே மத்திய உள்துறை அமித்ஷா தை பொங்கல் திருநாளில் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியானது. துக்ளக் பத்திரிகை விழாவில் பங்கேற்கும் அமித்ஷா அதிமுக, பாஜக இடையேயான தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டது. துக்ளக் பத்திரிக்கை விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்பார் என்பதால் அமித்ஷாவுடனான சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அமித்ஷாவின் சென்னை பயணம் திடீரென ரத்தானது.

அமித்ஷாவுக்கு பதில் நட்டா தமிழகம் வருகிறார்!

இந்நிலையில் துக்ளக் பத்திரிக்கை விழாவில் கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். அப்போது அதிமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது