மேற்கு வங்கத்தில் வித்தியாசமான பிரச்சாரத்தை தொடங்கும் ஜே.பி. நட்டா… ஒரு கைப்பிடி அரிசி திரட்டும் பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் வித்தியாசமான பிரச்சாரத்தை தொடங்கும் ஜே.பி. நட்டா… ஒரு கைப்பிடி அரிசி திரட்டும் பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் நாளை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, விவசாய குடும்பங்களில் ஒரு கைப்பிடி அரிசி திரட்டும் புதிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பா.ஜ.க. தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் முடியும் வரை அம்மாநிலத்துக்கு மாதந்தோறும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செல்ல தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் வித்தியாசமான பிரச்சாரத்தை தொடங்கும் ஜே.பி. நட்டா… ஒரு கைப்பிடி அரிசி திரட்டும் பா.ஜ.க.
ஜே.பி. நட்டா

கடந்த மாதம் ஜே.பி. நட்டா மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவரது வாகனம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் ஜே.பி. நட்டா மேற்கு வங்கத்தில் நாளை மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கட்சியினர் வீடு வீடாக செல்வதற்கும், மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிரான என்ற குற்றச்சாட்டை அகற்றுவதற்காக, பிரச்சாரமான ஏக் முதி சாவல் (ஒரு கைப்பிடி அரிசி) புதிய பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

மேற்கு வங்கத்தில் வித்தியாசமான பிரச்சாரத்தை தொடங்கும் ஜே.பி. நட்டா… ஒரு கைப்பிடி அரிசி திரட்டும் பா.ஜ.க.
பா.ஜ.க.

மேற்கு வங்கத்தின் பர்தவான் மாவட்டத்தில் ஒரு கைப்பிடி அரிசி பிரச்சாரத்தை ஜே.பி. நட்டா தொடங்கி வைக்க உள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்சாரத்தின்படி, மேற்கு வங்கத்தின் 45 ஆயிரம் கிராமங்களுக்கும் சென்று விவசாயிகளின் வீடுகளில் ஒரு கைப்பிடி அரிசியை பா.ஜ.க. தொண்டர்கள் சேகரிப்பார்கள். மொத்தம் 30 நாட்கள் பிரச்சாரம் நடைபெறும். திரட்டப்படும் அரசி, விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு சமுதாய உணவுக்காக பயன்படுத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.