காட்டாட்சி இளவரசருக்கு ஓய்வு கொடுங்க.. நிதிஷ் குமாருக்கு வேலை கொடுங்க.. பீகார் மக்களிடம் நட்டா வலியுறுத்தல்

காட்டாட்சி இளவரசருக்கு ஓய்வு கொடுங்க.. நிதிஷ் குமாருக்கு வேலை கொடுங்க.. பீகார் மக்களிடம் நட்டா வலியுறுத்தல்

காட்டாட்சி இளவரசருக்கு ஓய்வு கொடுங்க, நிதிஷ் குமாருக்கு வேலை கொடுங்க என்று பீகார் மக்களிடம் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வேண்டுகோள் விடுத்தார்.

பீகாரில் 3ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 5ம் தேதியுடன் (இன்றுடன்) 3ம் கட்ட தேர்தல் நடைபெறும் சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்கு சேகரிப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று லாரியாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

காட்டாட்சி இளவரசருக்கு ஓய்வு கொடுங்க.. நிதிஷ் குமாருக்கு வேலை கொடுங்க.. பீகார் மக்களிடம் நட்டா வலியுறுத்தல்
ஜே.பி.நட்டா

பீகார் விதான் சபாவின் எதிர்கட்சி தலைவராக காட்டாட்சியின் இளவரசர் (தேஜஸ்வி யாதவ்) உள்ளார். அவர் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்கவில்லை. இது மக்களிடம் மோசடி செய்வதாகும். அதனால் அவருக்கு ஓய்வு கொடுங்க. நிதிஷ் ஜிக்கு வேலை (மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு) கொடுங்க.

காட்டாட்சி இளவரசருக்கு ஓய்வு கொடுங்க.. நிதிஷ் குமாருக்கு வேலை கொடுங்க.. பீகார் மக்களிடம் நட்டா வலியுறுத்தல்
தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி

ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் கொரோனாவுக்கு பயந்து டெல்லியில் அமர்ந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இப்போது கேட்கிறார்கள் பீகாரில் என்ன நடந்தது என்று? தொற்றுநோய் காலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரும், பா.ஜ.க. தொண்டர்களும் மட்டுமே பீகாரை கவனித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.