ஒரு வம்சம் பலகீனமான இந்தியாவையும், வலுவான சீனாவையும் விரும்புகிறது ஏன்?… ராகுலுக்கு நட்டா பதிலடி

 

ஒரு வம்சம் பலகீனமான இந்தியாவையும், வலுவான சீனாவையும் விரும்புகிறது ஏன்?… ராகுலுக்கு நட்டா பதிலடி

காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து டிவிட்டரில் குறும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் பேசிய 2 நிமிடம் ஓடும் வீடியோவை அவர் வெளியிட்டு இருந்தார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜை சீனர்கள் தாக்குகின்றனர், அவர் ஒரு அரசியல்வாதியாக வாழ வேண்டுமென்றால், அவர் 56 இன்ஞ் யோசனையை பாதுகாக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டார்கள் என பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு வம்சம் பலகீனமான இந்தியாவையும், வலுவான சீனாவையும் விரும்புகிறது ஏன்?… ராகுலுக்கு நட்டா பதிலடி

ஜே.பி. நட்டா தனது டிவிட்டர் கணக்கில் தொடர்ச்சியா டிவிட்டுகளில், நாம் இன்று மீண்டும் ஒரு திட்டம் ஆர்.ஜி. மறுஅறிமுகம் பதிப்பை பார்த்தோம். ராகுல்காந்தி ஜி வழக்கம்போல் உண்மைகளில் பலகீனமாகவும், சேற்றை வாரி இறைப்பதில் வலுவாகவும் இருந்தார். 1962ம் ஆண்டின் கடந்த கால பாவங்களை கழுவி, இந்தியாவை பலவீனப்படுத்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக்கொள்கைகளை அரசியல்மயமாக்குவதற்கான முயற்சிகள் ஒரு வம்சத்தின் விரக்தியை காட்டுகிறது. 1962ஐ நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யு.என்.எஸ்.சி. சீட்டை விட்டு கொடுத்தது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனாவிடம் ஏராளமான நிலங்களை இழந்தது, 2008ம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது, ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் பலவற்றுக்கான நிதி.

ஒரு வம்சம் பலகீனமான இந்தியாவையும், வலுவான சீனாவையும் விரும்புகிறது ஏன்?… ராகுலுக்கு நட்டா பதிலடி

சமீபத்திய ஆண்டுகளில் டோக்லாம் அல்லது தற்போது, இந்தியாவின் ஆயுத படைகளை நம்புவதற்கு பதிலாக சீனர்களிடமிருந்து விளக்கங்களை ராகுல் காந்தி ஜி விரும்புகிறார். ஒரு வம்சம் பலகீனமான இந்தியாவையும், வலுவான சீனாவையும் விரும்புகிறது ஏன்? காங்கிரசில் பல தலைவர்கள் ஒரு வம்சத்தின் நேர்மறையற்ற செயல்பாடுகளை வெறுக்கிறார்கள். 130 கோடி இந்தியர்களுடன் பிரதமர் மோடி ஆழமாக வேரூன்றி இணைந்திருப்பது அவர்களுக்கு துரதிர்ஷ்டவசமானது. மோடி மக்களுக்காகவே வாழ்கிறார் மற்றும் உழைக்கிறார். அவரை அழிக்க விரும்புபவர்கள் அவர்களது கட்சியை மேலும் அழிப்பார்கள். இவ்வாறு அதில் பதிவு செய்துள்ளார். இதில் சோனியா காந்தி குடும்பத்தைத்தான் மறைமுகமாக ஒரு வம்சம் என அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.