பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை தெரிவிப்பதை மம்தா நிறுத்தி விட்டார்.. பா.ஜ.க. குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை தெரிவிப்பதை மம்தா நிறுத்தி விட்டார்.. பா.ஜ.க. குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை தேசிய குற்ற பதிவு பணிகயத்துக்கு தெரிவிப்பதை நிறுத்தி விட்டார் என்று ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மாதந்தோறும் 2 தினங்கள் மேற்கு வங்கத்துக்கு வருகை தருவர் என்று அம்மாநில பா.ஜ.க. தெரிவித்து இருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை தெரிவிப்பதை மம்தா நிறுத்தி விட்டார்.. பா.ஜ.க. குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜி

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா 2 நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு நேற்று சென்றார். கொல்கத்தாவில் நேற்று பா.ஜ.க. கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் தொண்டர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மனித கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் வழக்குகள் அதிகமாக உள்ளன. மம்தா பானர்ஜி குற்றங்களின் எண்ணிக்கையை தேசிய குற்றப்பதிவு பணியகத்துக்கு அளிப்பதை நிறுத்தி விட்டார். மேலும் மாநிலத்தில் பதிவான கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையை கூட வழங்க மறுத்து விட்டார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை தெரிவிப்பதை மம்தா நிறுத்தி விட்டார்.. பா.ஜ.க. குற்றச்சாட்டு
பா.ஜ.க.

மம்தா பானர்ஜியின் அரசாங்கம் தனது அரசியல் ஆதாயங்களுக்காக மேற்கு வங்க மக்களை பிரதான நீரோட்டத்தில் சேரவிடாமல் தடுத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் ஆரம்ப காலத்தில் மேற்கு வங்கத்திலிருந்து 2 தேசிய தலைவர்கள் கிடைத்தனர். எதிர்வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 200 இடங்களை வெல்லும். மேற்கு வங்க மக்கள் பா.ஜ.க.வுடனும், பிரதமர் மோடியுடனும் உள்ளனர் என்று தெரிவித்தார்.