உயிர்களை காப்பாற்றும்போது, சுயசார்பு பாரதம் மூலம் பொருளாதாரத்தையும் மோடி கவனித்து கொண்டார்.. ஜே.பி. நட்டா

உயிர்களை காப்பாற்றும்போது, சுயசார்பு பாரதம் மூலம் பொருளாதாரத்தையும் மோடி கவனித்து கொண்டார்.. ஜே.பி. நட்டா

லாக்டவுன் காலத்தில் உயிர்களை காப்பாற்றும் போது சுயசார்பு பாரதம் மூலம் பொருளாதாரத்தையும் பிரதமர் மோடி கவனித்து கொண்டார் என பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

ஒடிசா பா.ஜ.க. செயற் குழு தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி பொருளாதாரத்தின் மீது மனித உயிர்களை வைத்து, கடுமையான லாக்டவுனை அமல்படுத்தினார். லாக்டவுனை அமல்படுத்தியதன் மூலம் பதிலளிக்ககூடிய முறையை நிறைவு செய்த முதல் நாடு இந்தியா என மோடி தெரிவித்தார்.

உயிர்களை காப்பாற்றும்போது, சுயசார்பு பாரதம் மூலம் பொருளாதாரத்தையும் மோடி கவனித்து கொண்டார்.. ஜே.பி. நட்டா
லாக்டவுன்

மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக லாக்டவுனை விதிக்கும் தீர்க்கமான நடவடிக்கையை அவர் எடுத்தார். சுகாதார பிரச்சினை கவனித்து கொள்வதை தவிர, கரிப் கல்யாண் யோஜ்னா மற்றும் சுயசார்பு பாரதம் போன்ற சில திட்டங்களால் வாயிலாக மத்திய அரசு பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்தது. இந்தியா பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமல்ல பொருளாதார பிரச்சினைக்கும் தீர்வு கண்டுள்ளது என ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

உயிர்களை காப்பாற்றும்போது, சுயசார்பு பாரதம் மூலம் பொருளாதாரத்தையும் மோடி கவனித்து கொண்டார்.. ஜே.பி. நட்டா
பா.ஜ.க.

உலக சுகாதார அமைப்பின் பொது செயலாளரும் அதே கருத்தைதான் தெரிவித்தார். கொரோனா வைரஸால் ஏற்பட்ட சோகம் மற்றும் சவால்களை மத்திய அரசு திறம்பட வாய்ப்புகளாக மாற்றியது. பா.ஜ.க. தொண்டர்கள் தேசிய கல்வி கொள்கை 2020ன் சிறப்பு அம்சங்களை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.