தேசத்தை இழிவுப்படுத்துகிறார்.. எதிர்கட்சி தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் செய்கிறார்.. ராகுலை தாக்கிய நட்டா

தேசத்தை இழிவுப்படுத்துகிறார்.. எதிர்கட்சி தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் செய்கிறார்.. ராகுலை தாக்கிய நட்டா

எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என மத்திய அரசு உறுதியாக சொல்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ எல்லையில் இந்திய பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேசத்தை தொடர்ந்து இழிவுப்படுத்துகிறார் என பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.

தேசத்தை இழிவுப்படுத்துகிறார்.. எதிர்கட்சி தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் செய்கிறார்.. ராகுலை தாக்கிய நட்டா

ஜே.பி. நட்டா இது தொடர்பாக கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பு நிலைக்குழுவின் ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொண்டது கிடையாது. இருப்பினும் அவர் தொடர்ந்து தேசத்தை இழிவுப்படுத்துகிறார், ஆயதப்படைகளின் வீரத்தை கேள்வி கேட்கிறார். பொறுப்பான எதிர்க்கட்சி தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் செய்கிறார். ராகுல் காந்தி அந்த புகழ்பெற்ற வம்ச பராம்பரியத்தை சேர்ந்தவர். அங்கு பாதுகாப்பை பொருத்தவரை குழுக்கள் ஒரு பொருட்டல்ல, கமிஷன்கள் மட்டுமே செய்கின்றன.

தேசத்தை இழிவுப்படுத்துகிறார்.. எதிர்கட்சி தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் செய்கிறார்.. ராகுலை தாக்கிய நட்டா

காங்கிரசில் நாடாளுமன்ற விஷயங்களை புரிந்து கொண்ட தகுதியான பல உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ஒரு வம்சம் அவர்களை வளர விடாது. உண்மையில் அது வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த வெள்ளிகிழமையன்று ராகுல் காந்தி டிவிட்டரில், சீன ஊடுருவல் தொடர்பாக தேசபக்தி கொண்ட லடாக்கிகள் சொல்வதை கேளுங்க, இல்லையென்றால் இந்தியா பெரிய விலையை கொடுக்க வேண்டியது இருக்கும் என மத்திய அரசை எச்சரித்து பதிவு செய்து இருந்தார்.