அசாமுக்கு மோடி இதுவரை 35 முறை வந்துட்டார்.. ஆனால் 10 முறை கூட மன்மோகன் சிங் வரவில்லை.. ஜே.பி. நட்டா

 

அசாமுக்கு மோடி இதுவரை 35 முறை வந்துட்டார்.. ஆனால் 10 முறை கூட மன்மோகன் சிங் வரவில்லை.. ஜே.பி. நட்டா

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு அசாமுக்கு 35 முறை வந்துள்ளார். ஆனால் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 10 முறை கூட இங்கு வரவில்லை என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அசாமின் வளர்ச்சிக்கா போகிபீல் பாலத்தை கட்டியுள்ளோம். பிரதமர் மோடி அசாமுக்கு 35 முறை வந்துள்ளார். அதேவேளையில் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 10 முறை இங்கு வரவில்லை. மோடிஜி அரசாங்கம்தான் கியாசுக்கு ராயல்டியாக அசாமுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கொடுத்தது. மன்மோகன் ஜியால் இதனை ஏன் செய்யமுடியவில்லை?

அசாமுக்கு மோடி இதுவரை 35 முறை வந்துட்டார்.. ஆனால் 10 முறை கூட மன்மோகன் சிங் வரவில்லை.. ஜே.பி. நட்டா
பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஜி தலைமையின்கீழ் அசாமில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அசாமில் எய்ம்ஸ் அமைக்கப்படுகிறது இதற்காக ரூ.1,100 கோடி செலவிடப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் அசாமுக்கு 6 மருத்துவ கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 6 சிறந்த சிறப்பு பிளாக்குகள் கொடுக்கப்பட்டது. எனவே மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய வழி உள்ளது.

அசாமுக்கு மோடி இதுவரை 35 முறை வந்துட்டார்.. ஆனால் 10 முறை கூட மன்மோகன் சிங் வரவில்லை.. ஜே.பி. நட்டா
மன்மோகன் சிங்

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அசாமில் 59 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் யாரிடமும் மதத்தை கேட்பது இல்லை. ஒவ்வொருவரின் வளர்ச்சி, எல்லோருடைய வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்பதை நாங்கள் நம்புகிறோம். பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் அசாமில் கலாச்சாரத்தின் பாதுகாப்பு ஆகிய 3 விஷயங்களை முன்வைத்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். கலாச்சாரம் குறித்து நாம் பேசினால், கோபிநாத் பர்டோலிக்கு அடல்பிகாரி வாஜ்பாய் பாரத ரத்னா விருது வழங்கினார். இது அசாமின் பெருமையை உயர்த்தியது. பூபன் ஹரிசகாவுக்கு காங்கிரஸ் பாரத ரத்னா விருது வழங்கவில்லை ஆனால் பிரதமர் மோடியால் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.