உங்களை தவறாக வழிநடத்துபவர்கள் அரசியலை சுற்றியுள்ளவர்கள்.. விவசாயிகளை எச்சரித்த ஜே.பி. நட்டா

 

உங்களை தவறாக வழிநடத்துபவர்கள் அரசியலை சுற்றியுள்ளவர்கள்.. விவசாயிகளை எச்சரித்த ஜே.பி. நட்டா

உங்களை தவறாக வழிநடத்துபவர்கள் அரசியலை சுற்றியுள்ளவர்கள் என்பதை விவசாய சகோதரர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல், சாலைகளில் மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அது இடைத்தரகர்களின் இயக்கம், விவசாயிகள் இயக்கம் இல்லை என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். டெல்லியில் பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: இது பஞ்சாபில் விவசாயிகள் இயக்கம் அல்ல, அது ஒரு இடைத்தரகர்களின் இயக்கம்.

உங்களை தவறாக வழிநடத்துபவர்கள் அரசியலை சுற்றியுள்ளவர்கள்.. விவசாயிகளை எச்சரித்த ஜே.பி. நட்டா
ஜே.பி. நட்டா

பஞ்சாப் மண்டிகளில் விவசாயியால் மற்ற இடைத்தரகர்களை சமாளிக்க முடியவில்லை. இதுதான் அடிமைத்தனம். இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விவசாயிகளை பிரதமர் மோடி ஜி விடுவித்துள்ளார். உங்கள வழித்நடத்துபவர்கள் அரசியலை சுற்றியுள்ளவர்கள் என்பதை விவசாய சகோதரர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் விவசாயிகளுக்கு நட்பானவர்கள் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்தபிறகு நாம் வெளிநாடுகளிலிருந்து உணவு பொருட்களை வாங்கினோம். அதாவது நம்மிடம் ஒரு சரியான அமைப்பு இல்லை.

உங்களை தவறாக வழிநடத்துபவர்கள் அரசியலை சுற்றியுள்ளவர்கள்.. விவசாயிகளை எச்சரித்த ஜே.பி. நட்டா
பிரதமர் மோடி

ஆனால் பசுமை புரட்சியுடன் நமது விவசாயிகள் இணைந்தனர், நாட்டின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை, உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் உணவு அளிக்கிறோம் என்று இன்று நாம் பெருமையுடன் சொல்ல முடியும். இந்தியாவின் ஆத்மா விவசாயிகளிடம் வாழ்கிறது. இந்தியாவை நிலைநிறுத்த வைப்பது விவசாயி தான். ஆனால் விவசாயிக்கு எதிரான பல கொள்கைகளில் நீண்ட காலமாக அக்கறையின்மை இருந்தது என்பதும் உண்மைதான். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பி.எம். கிஷான் சாம்மன் நிதி திட்டத்தின்கீழ்,10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.6,000 செலுத்தியுள்ளது. சுவாமிநாதனின் அறிக்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஒரு மூலையில் கிடந்தது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் அந்த அறிக்கையை அமல்படுத்தும் பணியை மேற்கொண்டார். முதன்முறையாக விவசாயிகளின் செலவின் ஒன்றரை மடங்கு மதிப்பில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்து வழங்கினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.